Republic Day 2022: டெல்லி குடியரசு தின விழா: சில புகைப்படங்கள்
73 வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார்.
விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படைகள் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கொடி ஏற்றிய பிறகு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், வீர தீரச் செயலுக்கான சவுரியா சக்ரா விருதுகளை டெல்லியில் வழங்கி வருகிறார். ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த ஏஎஸ்ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கினார். இந்த விருதினை ஏஎஸ்ஐ பாபுவின் மனைவி ரினா ராணி, மகன் மாணிக் பெற்றுக்கொண்டனர்.
குடியரசு தினக் கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாகப் பார்க்கபடுவது டெல்லி ராஜப்பாட்டையில் இருந்து இந்தியா கேட் வரை செல்லும் வருடாந்திரப் பேரணிதான்.
இந்தக் கொண்டாட்டத்தில் இந்திய பண்பாடு மற்றும் சமூக பாரம்பரியங்களின் அணிவகுப்பு, இந்திய ராணுவத்தின் வான் வெளி சாகசங்கள் ஆகியன இடம் பெற்றிருந்தன.
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்!