Kerala rains | கேரளாவை புரட்டி போடும் மழை.. நிலைகுலைய வைக்கும் புகைப்படங்கள்!
அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆறுகளிலும் வெள்ளம் அதிகரித்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழந்து உள்ளது. குறிப்பாக கோட்டையம், இடுக்கி மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் வெள்ளப்பாதிப்புகள் மிகவும் தீவிரமாக உள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் மழை வெள்ளத்துடன் சேர்ந்து ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது
கோட்டையம் மாவடத்தில் உள்ள முண்டகாயம் பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்து அடித்து செல்லப்பட்டுள்ளது
தற்போது வரை வெள்ளத்தில் சிக்கி கேரளாவில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் கோட்டையத்தில் 12 பேரும், இடுக்கியில் 6 பேரும் கோழிக்கோடுவில் ஒருவரும் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வந்த இரு சிறுவர்கள் உள்பட மூன்று பேரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர் ஆகியோருக்கு கேரளா அரசு பாரட்டு தெரிவித்துள்ளது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழந்து உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி அணை தன்னுடைய முழு கொள்ள அளவையும் எட்ட உள்ளதால் மேலும் அப்பகுதியில் வெள்ளம் கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -