Maha Kumbha Mela 2025 : 2 லட்சம் கோடி வருவாய்? 40 கோடி மக்கள்! மகா கும்ப மேளா ரிப்போர்ட்..
12 ஆண்டுகளுக்குப் பிறகு பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. மகா கும்பமேளா இன்று காலை உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் தொடங்கியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான சங்கத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முதல் புனித நீராடினார்கள்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த நிகழ்வு, சுமார் 4,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு, பிப்ரவரி 26 வரை நடைப்பெறுகிறது.
இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் 45 நாட்கள் நடைபெறும் இந்த மெகா நிகழ்வுக்கு ரூ.7,000 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மஹா கும்ப மேளா மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பமேளா 2025 மூலம் உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் ரூ. 2 லட்சம் கோடி வரை ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மதிப்பீடுகளின்படி, 40 கோடி பார்வையாளர்கள் வரை வருவார்கள் என்றும், ஒவ்வொருவரும் சராசரியாக ரூ. 5,000 செலவழித்தால், இந்த நிகழ்வின் வருமானம் ரூ.2 லட்சம் கோடியை ஈட்டக்கூடும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -