Maha Kumbh 2025: மகா கும்பமேளா நிகழ்வு நிறைவு - 81 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை , மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்வில் துறவிகள், ஆண்கள் , பெண்கள், குழந்தைகள், பண்டிதர்கள் மற்றும் பலர் குவிகின்றனர். கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26 புதன்கிழமை நிறைவடைந்தது.
உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் கடைசி நாளான இன்று இதுவரை 81 லட்சம் பேர் புனித நீராடியுள்ளதாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.கடந்த 45 நாள்களாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளா நிகழ்வில் கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்துவருகின்றனர்.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளும் ஒன்றாகச் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நிகழ்வில் அரசியல் தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் என ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
கும்ப மேளாவில் மக்களின் நீராட உகந்த நீர் இல்லை என்றும், ஏராளமான மக்களின் வருகையில் தண்ணீர் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது என்ற சர்ச்சையும் எழுந்த்து.
கும்பமேளாவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதியதநாத் தலைமையில் நடைபெற்று வருகிறது. இவரும் கங்கையில் பாக்டிரீயாக்கள் இருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நாட்டின் கலாச்சாரத்தை பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக இருப்பதாக தெரிவித்தார்.
இறுதி நாள் என்பதால், மக்கள் புனித நீராடுவடுத்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.