Lata Mangeshkar Last Rites: லதா மங்கேஷ்கருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்திய பிரதமர் மோடி
மும்பையில் வசித்து வந்த பிரபல பாடகர் லதா மங்கேஷ்கர், உடல்நல பாதிப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் அரசு மரியாதையுடன் அவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.
பிரதமர் மோடி, மகாரஷ்டிரா மாநிலம் உதவ் தாக்கரே, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், பாலிவுட் நடிகர் ஷாரூக்க்கான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.
முன்னதாக, மும்பையில் வசித்து வந்த அவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். பாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
”லதா சகோதரிக்கு எனது மரியாதையை செலுத்தினேன்” என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -