Omicron Variant infection: ஒமிக்ரான் 500% கூடுதல் தொற்றும் தன்மை கொண்டது - புகைப்படத் தொகுப்பு
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பி.1.1.529 என்ற மாறுபட்ட ஒமைக்ரான் கொரோனா தொற்று கிட்டத்தட்ட 52 மாற்றங்கள் கொண்ட தொகுப்பாக உள்ளது.குறிப்பாக, வைரஸின் ஸ்பைக் புரதத்தில் 26-32 மாற்றங்களைக் கொண்டுள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகொரோனா வைரஸின் இந்த மரபியல் மாறுபாடுகள் இயற்கையானது. ஒமிக்ரான் தொற்று 500% கூடுதலாக பரவும் தன்மை கொண்டது. டெல்டா மாறுபாட்டை விட ஸ்பைக் புரதத்தில் இருமடங்கு மாற்றங்களைக் கொண்டுள்ளது
தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து, டெல்டா பிளஸ் மாறுபாடு என அழைக்கப்படும் (B.1.617.2) என்ற வகை தொற்றுப் பரவலில் ஆதிக்கம் செலுத்துகிறது. டெல்டா மாறுபாட்டை கூடுதல் பிறழ்வுடன் குறிக்கும் (B.1.617.3) வகை தொற்றுப் பரவல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று, கொரோனா வைரஸின் மற்றொரு மாறுபாட்டைக் குறிக்கும் கப்பா வைரசின் தொற்று பரவலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது
கடந்த 2 மாதங்களில் மட்டும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவலும், இறப்பு எண்ணிக்கையும் இருமடங்காக அதிகரித்துள்ளது
சர்வதேச அளவில், ஐரோப்பிய பிராந்தியத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன
கொரோனா இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -