Himachal Rain Alert : பார்க்கும் இடமெல்லாம் வெள்ள நீர், நிலச்சரிவு..இயற்கை பேரிடரால் பாதிப்பில் சிக்கிய ஹிமாச்சல பிரதேசம்!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மற்றும் குலுவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பியாஸ் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் இதுவரை ஆறு நபர்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் மூழ்கிய பஞ்சவக்த்ர கோயில் மற்றும் இதன் அருகில் சிக்கி உள்ள கிராம மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் பஞ்சவக்த்ர பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
ஆட் கிராமத்தை பஞ்சார் மற்றும் பண்டோ கிராமத்துடன் இணைக்கும் பாலங்களும் மண்டி மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெளிய வர வேண்டாம் என ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -