Delhi Rains : வரலாறு காணாத பலத்த மழையால் ஸ்தம்பித்த டெல்லி..மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம் !
தென் மேற்கு பருவ மழை தொடங்கிய பின், டெல்லியில் அதிகமாக மழை பெய்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த கனமழையால் ஒட்டுமொத்த டெல்லி மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
கனமழையால் சாலைகள், தாழ்வன பகுதிகள் என திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 153 மி.மீ. மழை பெய்ததாக டெல்லி சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் டெல்லியில் 153 மி.மீ. மழை கொட்டித் தீர்த்து உள்ளதால், ஒட்டுமொத்த டெல்லியும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
அதைதொடர்ந்து வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லி மட்டுமின்றி, காஷ்மீர், இமாசலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய அண்டை மாநிலங்களிலும் இன்றுவரை மழை நீடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -