G20 Summit : ஜி20 உச்சி மாநாட்டிற்காக தடபுடலாக தயாராகும் தலைநகரம்..!
உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் இடம்பெற்றுள்ள, ஜி20 அமைப்பிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதன்படி, அந்த அமைப்பின் உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனால் ஒட்டுமொத்த டெல்லியே விழாக்கோலம் பூண்டுள்ளது. அதேநேரம், டெல்லியில் மாநகரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தின் முன் 27 அடி உயரத்தில் 8 வகை உலோகங்களால் ஆன நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை இந்தியாவின் வளமான கலாச்சாரத்தை கண் முன் நிறுத்துவதாக பிரதமர் மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் சிறந்த அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது இந்திய அரசு.
இந்நிலையில் இந்த ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் பிரதிநிதிகளுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி பாத்திரங்களில் உணவு பரிமாறப்பட இருக்கிறது.
இந்த பாத்திரங்கள் 200க்கும் மேற்பட்ட கைவினைஞர்களால் சுமார் 50,000 மணி நேரத்தில் சுமார் 15,000 வெள்ளிப் பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜெய்ப்பூரைச் சேர்ந்த உலோகப்பொருள் நிறுவனமான ஐரிஸ் தெரிவித்துள்ளது
மேலும் இந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பு பிரபல ஐடிசி ஹோட்டலிடம் வழங்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -