Maha Kumbh 2025: மகா கும்பமேளா - 50 கோடியை கடந்த பக்தர்களின் எண்ணிக்கை!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை , மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்வில் துறவிகள், ஆண்கள் , பெண்கள், குழந்தைகள், பண்டிதர்கள் மற்றும் பலர் குவிகின்றனர். கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26 புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26 புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும். வரலாற்று ரீதியாக, கும்பமேளா புனித நீரில் நீராடுவதுடன், பாவங்களைப் போக்குவதற்கும், மோட்சத்திற்கான பாதையில் இறங்குவதற்கும் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

இந்த மகா கும்பமேளா உலகின் மிகப்பெரிய மத நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் கொண்டாடப்படும் கும்பமேளாவானது, மூன்று புனித நதிகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் ( பூமிக்கு அடியில் பாயும் நதி ) சந்திக்கு இடமாக கருதப்படுகிறது
இந்தியா முழுவதிலும் இருந்தும் கும்பமேளாவிற்கு மக்கல் படையெடுத்து சென்று வருகிறார்கள். சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் திரைப்பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறார்.
மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் பங்கேற்கும் பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டிவிட்டது
இந்த நிலையில், திங்கள்கிழமை(பிப். 17) வரையிலான நிலவரப்படி, கும்ப மேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் கலந்துகொண்டுள்ள பக்தர்கள் எண்ணிக்கை 54.31 கோடியைக் கடந்துள்ளது என்று உத்தரப் பிரதேச அரசின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில், 1.36 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி, 26 -ம் தேதி முடிவடைய உள்ளது. அதற்குள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -