Cheetah Is Back: சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகம் செய்த பிரதமர் மோடி!
பிரதமர் மோடி செப்.17 2022 தனது 72ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅழிந்துபோனதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை, மத்தியப் பிரதேச வனப் பகுதிகளில் திறந்துவிட்டார்
நாட்டில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை (சீட்டாக்கள்) இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் ”ப்ராஜக்ட் சீட்டா”
இந்தியாவில் கடந்த 1952ஆம் ஆண்டு நாட்டில் சிவிங்கிப் புலிகள் அழிந்து விட்டதாக அதிராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
இந்நிலையில், 70 ஆண்டுகளுக்குப் பிறகு ’ப்ராஜக்ட் சீட்டா’ எனும் சிவிங்கிப் புலிகள் மறுஅறிமுகத் திட்டத்தின் மூலம் நமீபியாவைச் சேர்ந்த 8 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட்டு காடுகளில் விடப்பட்டன
அதன்படி, மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில், பிரதமர் நரேந்திர மோடி சிவிங்கிப் புலிகளை விட்டார்
இந்த சிவிங்கிப் புலிகள் ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன
இந்த சிவிங்கிப் புலிகள் அனைத்தும் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படும்
மேலும் ஒவ்வொரு சிறுத்தைக்கு பின்னாலும் ஒரு பிரத்யேக கண்காணிப்பு குழு இருக்கும், அவர்கள் 24 மணி நேரமும் இந்த சிவிங்கிப் புலிகளின் நடவடிக்கைகளை உற்று கண்காணிப்பர் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -