Chandrayaan 3 : சந்திராயன் 2ஐ விட இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்டதா சந்திராயன் 3 விண்கலம்?
சந்திராயன் 2 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விக்ரம் லேண்டர் சரியாக நிலாவில் தரையிறங்க வில்லை ஆனால் ஆர்பிட்டர் மட்டும் இன்று வரை நிலாவை சுற்றி வந்து கொண்டுதான் இருக்கிறது.
அதைதொடந்து சந்திராயன் 2 வில் ஏற்பட்ட கோளாறுகள் எதுவும் சந்திராயன் 3 வில் ஏற்படாத வகையில் சுமார் ரூ. 615 கோடியில் இந்த விண்கலத்தை தயாரித்துள்ளனர்.
இந்த விண்கலத்தின் லேண்டரில் எக்ஸ்-பேண்ட் ஆண்டெனாவும் பொருத்தப்பட்டுள்ளது. இது தகவல் தொடர்புகளை உறுதி செய்யும்.
மேலும் பெட்டி வடிவிலான லேண்டர் பாகம் நான்கு தரையிறங்கும் கால்களையும், பாதுகாப்பான டச் டவுனை உறுதிசெய்ய பல சென்சார்கள் மற்றும் ஆபத்துகளைத் தவிர்க்க உதவும் கேமராக்களின் தொகுப்பையும் கொண்டுள்ளது.
அதேபோல் விநாடிக்கு 3 மீட்டர் வேகத்தில் தரையிறங்கினாலும் சேதமடயாத வகையில் லேண்டரின் கால்கள் வலுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் தேவையான ஆற்றலை உருவாக்கிக் கொள்ள ஒவ்வொரு பகுதியிலும் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் உந்துவிசை தொகுதி 758 வாட்ஸ், லேண்டர் 738 வாட்ஸ் மற்றும் ரோவர் 50 வாட்ஸ் அளவிற்கு ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டுள்ளன. (Photo credits: ISRO)
இவ்வளவு சிறப்பு அம்சங்களை கொண்ட சந்திராயன் 3 இன்று மாலை 2.45 மணி அளவில் விண்ணில் ஏவப்படவுள்ளது. (Photo credits : ISRO)