Bengaluru-Mysuru Expressway : 8480 கோடி செலவில் உருவான பெங்களூர் - மைசூர் எக்ஸ்பிரஸ்வேவின் திகைக்கவைக்கும் புகைப்படங்கள்!
118 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த பெங்களூர் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் 2018ம் ஆண்டு தொடங்கியது.
6 வழிச்சாலையாக உருவாகியுள்ள இந்த வழித்தடத்தில் கூடுதலாக சர்வீஸ் சாலைகள் 2 இரண்டு பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.
118 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த புதிய நெடுஞ்சாலை 11 மேம்பாலங்களும், 64 சுரங்கவழி பாதைகள், 5 புறவழிச்சாலைகளையும், 42 சிறிய பாலங்களையும் இந்த புதிய நெடுஞ்சாலை இணைக்கிறது.
இந்த நெடுஞ்சாலை 2 கட்டமாக அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக 58 கிலோமீட்டர் தொலைவில் பெங்களூர் முதல் நிடாகட்டா வரையிலும், இரண்டாம் கட்டமாக 61 கிலோமீட்டர் தொலைவிற்கு நிடாகட்டா – மைசூர் வரையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலையானது பெங்களூரில் இருந்து மைசூர் செல்வதை எளிமைப்படுத்துவது மட்டுமின்றி கூர்க், ஊட்டி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு பெங்களூரில் இருந்து செல்வதை எளிமையாக்கும்.
இந்த ஆறு வழித்தடத்தில் இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அவர்கள் சர்வீஸ் சாலையை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.