PM Modi visits Arichal Munai: அரிச்சல் முனையில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு -சமீபத்திய க்ளிக்ஸ்!
அரிச்சல் முனைக்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்தார்.
பின்னர், அரிச்சல் முனையில் உள்ள தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அயோத்தி கோயில் திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், ராமர் பாலம் கட்டப்பட்ட இடமாக கருதப்படும் அரிச்சல் முனையில் பிரதமர் மோடி..
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்.” அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலுக்கு நேற்று நான் சென்ற நிகழ்வை எப்போதும் மறக்க இயலாது. கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் காலம் கடந்த பக்தி நிரவியுள்ளது.” என்று தமிழில் வீடியோடு வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
கோதண்டராமா் கோயிலுக்குச் சென்று பிரதமர், அங்குள்ள ஸ்ரீராமர், சீதா, அனுமன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்
அங்குள்ளவர்களிடன் உரையாடினார்.
கோதண்டராமா் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.