Ayodhya Ram Mandir: திறப்பு விழாவுக்கு தயாராகும் அயோத்தி ராமர் கோயில் - சமீபத்திய புகைப்படங்கள்!
அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appராமரின் ஜென்ம பூமி என்று நம்பப்படுகிற அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
யோத்தி ராமர் கோயில் சுமார் 1000 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் வகையில், அறிவியல்பூர்வமாக கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்காக அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
மார் 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில், 1000 ஆண்டுகளையும் கடந்து நிலைத்து நிற்கும் வகையில் அறிவியல்பூர்வமாக கட்டப்பட்டுள்ளது. பூகம்பங்கள் மற்றும் மிகத் தீவிரமான வெள்ளம் போன்றவற்றையும் தாங்கும் வகையில், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இந்த கோயில் இறுதி வடிவம் பெற்றுள்ளது.
ராமர் கோயிலானது மொத்தமாக, கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது கன் மண்டபம், ரங் மண்டபம், நிருத்ய மண்டபம், கீர்த்தனை மண்டபம், பிரார்த்தனை மண்டபம் ஆகியவை அடங்கும்.
ராமர் கோயிலானது மொத்தமாக, கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது கன் மண்டபம், ரங் மண்டபம், நிருத்ய மண்டபம், கீர்த்தனை மண்டபம், பிரார்த்தனை மண்டபம் ஆகியவை அடங்கும்.
ராம் கோயில் வளாகத்திற்குள், மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரா, மகரிஷி அகஸ்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷப்ரி மற்றும் தேவி அஹில்யாவின் மரியாதைக்குரிய மனைவி ஆகியோருக்கு என பிரத்யேக கோயில்கள் உள்ளன
கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 380 தூண்களும் முற்றிலுமாக கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. நவீன இரும்பு, எஃகு அல்லது சிமென்ட் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
கோயிலின் வடிவமைப்பு 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தைத் தாங்கும் திறன் கொண்டது, மேலும் 1,000 ஆண்டுகளுக்கு பழுதுபார்ப்பு தேவையில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -