Kovai driver Sharmila : கோவை பெண் ஓட்டுநருக்கு அடித்தது ஜாக்பாட்.. காரை பரிசாக வழங்கிய கமல்!
கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா, ஒரு தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணிப்புரிந்து வந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅவருக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், திமுக எம்.பி.கனிமொழி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்தும் தொலைபேசி மூலமாகவும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஷர்மிளாவிற்கும் அவர் பணிப்புரிந்த பஸ் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக பணியில் இருந்து விலகினார் ஷர்மிளா.இதையடுத்து எம்.பி கனிமொழி, ஷர்மிளாவிற்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக கூறியிருந்தார்.
தற்போது மக்கள் நீதி மையத்தின் தலைவரும் தமிழ் திரையுலகின் ஸ்டார் நடிகருமான கமல் ஹாசன், கமல் பண்பாட்டு மையம் சார்பாக ஷர்மிளாவிற்கு காரை பரிசாக அளிப்பதாக கூறியுள்ளார்.
ஷர்மிளாவை நேரில் சந்தித்த கமல், அவருக்கு கார் பரிசாக அளிப்பதன் மூலம் ஷர்மிளா தொழில்முனைவோராக மாறுவார் என்று கூறியுள்ளார்.
மேலும் மாருதி சுசுகி எர்டிகா கார் வாங்குவதற்கான முன்பணத்தையும் அவரிடம் அளித்துள்ளார் கமல்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -