ரசாயன கழிவுகளால் பாதிப்புக்கு உள்ளான வட சென்னை!
கடந்த டிசம்பர் 3 அன்று வலுப்பெற்ற மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 அன்று ஆந்திரா மாநிலத்தின் நெல்லூரில் கரையை கடந்தது. மிக்ஜாம் புயல் எதிரொலியினால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது.
தலைநகர் சென்னையில் கொட்டி தீர்த்த மழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. பள்ளிக்கரணை வேளச்சேரி மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் வெள்ள நீர் முதல் தளம் வரை புகுந்தது.
பள்ளிக்கரணையில் ஏறியை உடைத்துக் கொண்டு வெளியேறிய தண்ணீர் கார் மற்றும் இரு சக்கரவாதங்களை அடித்துச் சென்றது. இதைத் தொடர்ந்து வட சென்னையையும் புரட்டி போட்டது.
வடசென்னை பகுதிகளில் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீரில் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயன கழிவுகள் கலந்ததால் வட சென்னை வாழ் பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக் உள்ளாயிருக்கிறார்கள். இந்த வெள்ள நீரில் ரசாயனம் கலந்தது தொடர்பாக விவாதங்கள் எழுந்த நிலையில் பலர் இதற்கு கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுகளின் அடிப்படையில் சிபிசிஎல் நிறுவனத்தின் தொழிற்சாலை கழிவுகள் வெள்ள நீரில் கலக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளது. கடல் நீரில் கலக்கப்பட்டுள்ள ரசாயன கழிவுகளை அகற்றும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ரசாயன கழிவு வெள்ள நீரில் கலந்துள்ளதால் வடசென்னை வாழும் பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். அரசு உடனடியாக கழிவுகளை வெளியேற்ற வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.