மாமல்லபுரத்தில் நடனமாடிய ஹிரோஷிமா மாகாண சபாநாயகர்!
![மாமல்லபுரத்தில் நடனமாடிய ஹிரோஷிமா மாகாண சபாநாயகர்! மாமல்லபுரத்தில் நடனமாடிய ஹிரோஷிமா மாகாண சபாநாயகர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/02/ecb505f25c90e4c8af7e965f54dcf2f867900.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
ஜப்பான் நாட்டில், உள்ள ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் நகமோட்டோ டகாஷி தலைமையில் அம்மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மாமல்லபுரம் வந்தனர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![மாமல்லபுரத்தில் நடனமாடிய ஹிரோஷிமா மாகாண சபாநாயகர்! மாமல்லபுரத்தில் நடனமாடிய ஹிரோஷிமா மாகாண சபாநாயகர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/02/5218fdc15722b1a10fd2ed0df0333875b6546.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
கடற்கரை கோயில் வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் மலர் மாலை அணிவித்து, கரகாட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஹிரோஷிமா சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
![மாமல்லபுரத்தில் நடனமாடிய ஹிரோஷிமா மாகாண சபாநாயகர்! மாமல்லபுரத்தில் நடனமாடிய ஹிரோஷிமா மாகாண சபாநாயகர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/02/1a4081a8106d45e18f2dd90a4621d35f98ac7.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
அப்போது கரகாட்ட இசைக்கலைஞர்கள் மேளம் அடித்து கரகாட்டம், மயிலாட்டம் ஆடினர். அப்போது கரகாட்ட இசையில் மெய்மறந்து ரசித்த ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் நகமோட்டோ டகாஷி அந்த இசைக்கலைஞர்கள் ஆடியதுபோது, தான் ஒரு சபாநாயகர் என்பதை கூட மறந்த உற்சாகத்தில் கோட்-சூட்டுடன் குத்தாட்டம் ஆடி மகிழ்ந்தார்.
அப்போது நகாரா கோஜி என்ற பாராளுமன்ற உறுப்பினர் தன் தலையில் கரகம் வைத்து ஆடி அழகு பார்த்தார். அப்போது சுற்றுலா வந்த சக பயணிகள் ஒரு சபாநாயகர் என்பதை கூட மறந்து ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் குத்தாட்டம் ஆடியதை பார்த்து ரசித்தனர்
பிறகு அவர்கள் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்திற்கு நடந்து சென்று கடற்கரை கோயில் சிற்பங்களை பார்த்து ரசித்தனர்.
அப்போது மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களின் வரலாற்று தகவல்களை உடன் வந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் அவர்களுக்கு ஜப்பான் மொழியில் விளக்கி கூறினார்
பிறகு மாமல்லபுரம் கடற்கரை கோயில் சிற்பங்களை சுற்றி பார்த்த ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் மற்றும் அம்மாகாண பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழக சுற்றுலாத்துறை சார்பில் உலோகத்தால் ஆன கடற்கரை கோயில் சிற்பம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
ஜாலியாக குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -