Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையொட்டி, வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் சென்னையில் விமான கண்காட்சி நடைபெற உள்ளது. அதற்கான ஒத்திகை நடந்து வருகிறது. அதன் புகைப்படங்கள் பிரம்மிப்புடன் இருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசென்னை வான்பரப்பில் நண்பகல் நேரங்களில் விமானங்கள் சீறிப்பாய்ந்து பொதுமக்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றன.
இரண்டு நாட்களும் காலை 11 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த பிரமாண்ட சாகச நிகழ்ச்சியை பொதுமக்களும் கண்டுகளிக்கலாம். மொத்தம் 72 விமானங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகோய்-30 எம்கேஐ, ரஃபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போன்ற போர் விமானங்கள் சாகசம் நிகழ்த்த உள்ளன. போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் Mi-17 மற்றும் பிரசாந்த் LCH (இலகுவான போர் ஹெலிகாப்டர்) போன்ற ஹெலிகாப்டர்கள், டகோட்டா மற்றும் ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன.
மெரினா கடற்கரையில் அமைக்கப்படும் இரண்டு நுழைவு வாயில்கள் வழியாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சியை கட்டணம் இல்லாமல் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற உள்ள விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளை மறக்காம காணுங்கள். வானில் இந்திய விமானப் படை நிகழ்த்தும் மாயங்களை காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -