Cyclone Mandous: அச்சுறுத்திய மாண்டஸ் புயல்: பாதிப்புகள் குறித்த புகைப்பட தொகுப்பு!
மாண்டஸ் புயலால் பெய்த கனமழையில் சென்னை அருகே சுவர் இடிந்து விழுந்து கார் சேதமடைந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்ட பாதை இந்த மழையில் பாதிக்கப்பட்டது. இது விரைவில் சீரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் மழை பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை தொகுதியில் மாண்டஸ் புயலினால் வீடு இடிந்து,மரம் விழுந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.
ஜோன்ஸ் ரோடில், ஜீனிஸ் சாலை, காரணீஸ்வரர் கோயில் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார்.
சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக 300 மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக மாநகராட்சி மேயர் தகவல் தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயலில் சென்னையில் பல்வேறு பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 நாட்களுக்குள் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -