Chennai Metro : தினமும் மெட்ரோவில் பயணிப்பவரா நீங்கள்..? சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பை தெரிஞ்சிக்கோங்க!
சென்னை மாநகரத்தின் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க, சென்னை மெட்ரோ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதன்முதலாக, 2015 ஆம் ஆண்டில் ஆலந்தூர் - கோயம்பேடு மெட்ரோ சேவை திறக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டில், சின்னமலை - விமான நிலையம் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது.
இப்போது, சென்னை மெட்ரோவின் இரண்டாவது கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது.
தற்போது, ஆலந்தூர் மெட்ரோவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யும் பணி நடைபெறுவதால் மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து எல்.ஐ.சி வழியாக ( பச்சை வழித்தடத்தில் ) விமான நிலையம் செல்வோர் ஆலந்தூரில் இறங்கி நீல வழித்தடத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சரி செய்யப்பட்டு, நாளை காலை முதல் மீண்டும் வழக்கம் போல், சேவை தொடரும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -