தென் மாவட்டத்திற்கு படையெடுக்கும் வாகனங்கள்..இவ்வளவு காரா?
தென் மாவட்டத்திற்கு படையெடுக்கும் மக்கள், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெங்கல்பட்டு புறவழிச் சாலையில் அமைந்துள்ள, பாலாறு பாலத்தில் இருந்து பழவேலி என்ற பகுதி வரை சுமார் 6 km தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி
செங்கல்பட்டில் உள்ள சர்வீஸ் சாலையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல்
பழைய பாலாறு பாலத்தில் சாலை ஆங்காங்கே குண்டும் குழியும் இருப்பதால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டத்தை நோக்கி பெரும்பாலும் கார்களில் பொதுமக்கள் படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கணவன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் , ஆபத்தை உணராமல் பயணித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வாகனத்தில் மூன்று நபர் மற்றும் நான்கு நபர்கள் பயணம் செய்து வருகின்றனர்
ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தில் குடும்பத்துடன் பயணிக்கும் பொதுமக்கள்
கார்கள் மற்றும் பேருந்து மூலமாக பொதுமக்கள் பொங்கலை கொண்டாட சென்று வரும் நிலையில், பொதுமக்களின் ஒரு பகுதியினர் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -