Pongal 2024 Cinema : பொங்கலுக்கு அப்டேட் மேல் அப்டேட் விட்டு அசத்தும் தயாரிப்பு நிறுவனங்கள்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, சினேகா உள்ளிட்ட பலரும் நடிக்கும் கோட் திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. பிரசாந்தின் ரசிகர்கள் பலர், “டாப் ஸ்டார் பிரசாந்த் இல்லாத பொங்கல், பொங்கலே கிடையாது” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
டி.ஜே. ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தின் வண்ணமயமான பொங்கல் வாழ்த்து போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் ரஜினிகாந்தின் இரு புகைப்படங்களை கொண்டு இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் அப்டேட் நாளை (16.1.24) காலை 11 மணியளவில் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இத்துடன் பொங்கல் வாழ்த்துகளையும் அப்படக்குழுவினர் தெரிவித்து கொண்டனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் இருந்து “ஏ புள்ள” என்ற பாடல் பொங்கலையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினி, முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் கபில் தேவ் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி புகழ் பிரபாஸ், தி ராஜா சாப் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. பாகுபலிக்கு பின் இவர் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்கள் சுமாரான விமர்சனங்களை பெற்றதால், பிரபாஸின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இந்நிலையில், பிரபாஸின் பெயர் ஆங்கிலத்தில் Prabhas பதிலாக Prabhass என எண் கணிதத்தை அடிப்படையாக வைத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.