Zucchini : கண்டிப்பாக உண்ணவேண்டிய காய்கறி! சீமை சுரைக்காயில இவ்வளவு நன்மைகளா?

பார்ப்பதற்கு வெள்ளரிக்காய் போல இருக்கும் இந்த காயில் ஏகப்பட்ட நன்மைகளும் மருத்துவ குணங்களும் உள்ளன. கோடைக்காலத்தில் இது அதிகமாக கிடைக்கிறது. இந்த காயால் உருவாக்கப்பட்ட பாஸ்தாக்களும் கிடைக்கின்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இது உங்கள் செரிமான அமைப்புக்கு நல்லது. சுரைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது குடல் இயக்கத்திற்கு உதவுகிறது . அதிக நீர்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

மேலும், சீமை சுரைக்காய் உள்ள நார்ச்சத்து, உங்கள் பசியை நீண்ட நேரம் குறைப்பதற்கும், அதிகமாக உணவுகளை எடுத்துக்கொள்வதையும் தடுக்கிறது.
பெக்டின் என்ற நார்ச்சத்து உள்ளது, இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, இதனால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், சுரைக்காயில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
அதிக நீர்ச்சத்து மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் நல்ல மூலமாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை மற்ற முக்கிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -