Green Tea: ஏராளமான நன்மைகள் நிறைந்த கிரீன் டீ-யை எப்போது குடிக்க வேண்டும்?
கிரீன் டீயில் பாலிஃபீனால்கள் அதிகம் இருப்பதால், இது தோல் எரிச்சலைத் தணிக்க உதவுகிறது. தோலில் தடவி பயன்படுத்தும்போது தோல் வீக்கத்தைக் குறைப்பதிலும் இது பயனுள்ளதாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகிரீன் டீ என்பது உடல் எடையை குறைக்கும் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். கிரீன் டீ உடல் கொழுப்பை உடைத்து, தொப்பை கொழுப்பை எரிக்க பயனுள்ளதாக இருக்கும் என்று உணவு சப்ளிமெண்ட்ஸின் தேசிய சுகாதார அலுவலகம் கூறுகிறது.
எந்த நல்ல உணவானாலும், சரியான நேரத்தில் அதனை உட்கொள்வது அவற்றின் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக அனுபவிக்க மிகவும் முக்கியமானது.
காபி மற்றும் பிற காஃபினேட்டட் பானங்களைப் போலல்லாமல், கிரீன் டீயில் அதிக அளவு எல்-தியானைன் என்ற அமினோ அமிலம் உள்ளது.
L-theanine மற்றும் காஃபின் மூளையின் செயல்பாடு மற்றும் மனநிலையை மேம்படுத்துவதற்கு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் ஒன்றாகச் செயல்படுகின்றன
எனவே, காலையில் வெறும் வயிற்றில், கிரீன் டீயை உட்கொள்வது, அந்த நாளைத் தொடங்குவதற்கும் அதன் நன்மைகளை அனுபவிப்பதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -