Benefits Of Sunflower Seeds: உணவில் சூரியகாந்தி விதைகள் இருப்பது ஏன் நல்லது? இதைப் படிங்க!
சூரியகாந்தி விதைகள், பெரும்பாலும் சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு ஊட்டச்சத்து மிகுந்தது. காலை நேரத்தில் ஆற்றலையும் உயிர்ச்சக்தியையும் சேர்க்கும். சூரியகாந்தி பூவில் இருந்து அறுவடை செய்யப்பட்ட இந்த விதைகள்ஒரு சிறிய கைப்பிடி சூரியகாந்தி விதைகள் ஒரு சிற்றுண்டிக்கும் அதிகமான நன்மைகளை தருகின்றன.
இதிலுள்ள மெக்னீசியம் வலுவான எலும்புகள் மற்றும் தசைகளை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் செலினியம் மற்றும் துத்தநாகம் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவத உதவுகிறது.
சூரியகாந்தி விதைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் கலவையானது, ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது. குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது ஆபத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகளை வழங்குகிறது.
செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக இருக்க உதவும். மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை ஊக்குவிக்கிறது. கூடுதலாக, இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
செரோடோனின் உற்பத்தியில் ஈடுபடும் அமினோ அமிலமான டிரிப்டோபனின் நல்ல மூலமாகும். போதுமான செரோடோனின் அளவுகள் மனநிலை கட்டுப்பாடு மற்றும் நல்வாழ்வு உணர்வுடன் தொடர்புடையது.