Walnut Benefits: வால்நட் தினமும் சாப்பிடலாமா? ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!
வால்நட்ஸை தினமும் இதனை எடுத்துக்கொள்வது நமது உடலுக்குத் தேவையான நலன்களைத் தருகிறது.அதன் பட்டியல்...
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவால்நட்டில் உள்ள இதயத்திற்கு உகந்த கொழுப்புகள்: அனைத்து நட்ஸ்களுடன் ஒப்பிடுகையில் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்புகள் வால்நட்டில் உள்ளது. ஒமேகா -3 இதயத்தைப் பாதுகாக்கிறது.
கலோரிகள் நிறைந்த இந்த நட்ஸ்கள் எடை இழப்பு/நிர்வகிப்புக்கு அவசியம் தேவைப்படுகிறது. இந்த நட்ஸ்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், அதாவது சிறிய அளவுகளில் எடுத்துக்கொள்வது கூட, உங்கள் உணவில் நிறைய ஆரோக்கியத்தை சேர்க்கின்றன. வால்நட் பருப்பில் புரதங்கள், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன
வால்நட்ஸ் மூளைக்கான சூப்பர் உணவு என்று சொல்லலாம். வால்நட் தாவர ஒமேகா-3 கொழுப்புகள் மற்றும் பிற நட்ஸ்களில் இல்லாத பலவகையான பாலிபினோலிக் கலவைகளின் நல்ல மூலமாகும். ஒமேகா -3 மற்றும் பாலிபினால்கள் இரண்டும் வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன.
வால்நட்ஸில் அதிக ALA ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது மூளை ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. அக்ரூட் பருப்பின் பாலிபினோலிக் கலவை மற்ற நட்ஸ்களிலிருந்து வேறுபடுகிறது மற்றும் மூளையின் மகிழ்ச்சி ஹார்மோன் செரோடோனின் உற்பத்தியில் நன்மை பயக்கும்
வால்நட்ஸில் y-டோகோபெரோல் உள்ளது, இது புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்போடு தொடர்புடைய வைட்டமின் ஈ வடிவமாகும். அவற்றின் வளமான தாவர பாலிபினால்கள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதோடு தொடர்புடையது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -