Walnut coconut ladoo recipe : சத்தான சுவையான வால்நட்ஸ் தேங்காய் லட்டு ரெசிபி இதோ..!
லட்டு பிரியரா நீங்கள்? இதோ இந்த சத்துகள் நிறைந்த சுவையான வால்நட்ஸ் தேங்காய் லட்டு ரெசிபி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவால்நட்ஸ் தேங்காய் லட்டு தேவையான பொருட்கள்: வால்நட்ஸ் - 1 கப், தேங்காய் துருவல் - 1 1/2 கப், பிரவுன் சுகர் - 1/4 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, காய்ச்சி ஆறிய பால் - 1/4 கப், நெய் - 1 தேக்கரண்டி.
செய்முறை : முதலில் வால்நட்டுகளை கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு ஒரு அகல கடாயில் நெய் ஊற்றி, தேங்காய் துருவல் சேர்த்து 3 நிமிடம் லேசாக வறுக்கவும்.தேங்காயின் ஈரம் போன பின், இதில் அரைத்த வால்நட்ஸ் சேர்த்து 4 நிமிடம் வறுக்கவும்.
அடுத்து இதில் பிரவுன் சுகர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளரவும். லட்டு கலவை சேர்ந்து வந்ததும், அடுப்பை அணைக்கவும்.
லட்டு கலவை மிதமான சூட்டில் இருக்கும் போது உருண்டையாகப் பிடிக்கவும்.
பிடித்த லட்டுவை தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்தால், சுவையான வால்நட்ஸ் தேங்காய் லட்டு தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -