Chickpea Pulao Recipe : வீட்டில் காய்கறி எதுவுமில்லையா? சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி..கொண்டைக்கடலை புலாவ் இன்றே செய்யுங்கள்!
தேவையான பொருட்கள் : கொண்டக்கடலை - 1 கப் ( 250 மி.லி கப் ), அரிசி - 300 கிராம், நெய் - 2 மேசைக்கரண்டி, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் - 1 தேக்கரண்டி, சோம்பு - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 5 கீறியது, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, தக்காளி - 4 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, சென்னா மசாலா தூள் - 2 தேக்கரண்டி, புதினா இலை, கொத்தமல்லி இலை, உப்பு, தண்ணீர், சூடு தண்ணீர் - 2 கப் ( 250 மி.லி கப் ).
செய்முறை: முதலில் குக்கரில் ஊறவைத்த கொண்டக்கடலை, மஞ்சள் தூள், உப்பு, கிராம்பு, பிரியாணி இலை, மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து, பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். அடுத்து உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், சென்னா மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
பிறகு வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கலந்துவிடவும். பின்பு புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து, ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலந்துவிட்டு சூடு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.
அவ்வளவு தான் சுவையான கொண்டக்கடலை புலாவ் தயார்!