Constipation: மலச்சிக்கலா பிரச்னையா? இனி கவலை வேண்டாம் - இதோ டிப்ஸ்!
தினமும் காலையில் தேனுடன் கலந்த எலுமிச்சை நீரைக் குடிப்பதால், மலச்சிக்கல், செரிமானக் கோளாறு மற்றும் அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஓமம் கலந்த தண்ணீர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. அதனை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதால் வயிற்றில் வீக்கம் ஏற்படுவது குறைகிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்திற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. கேரட், ஓட்ஸ், பட்டாணி, பருப்பு, பீன்ஸ், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த இயற்கை சாறு மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட பெரிய அளவில் உதவும். இந்த பிரச்சனையை அடிக்கடி எதிர்கொள்ளும் நபர்கள் தங்கள் உணவில் கற்றாழை சாற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறிய அளவில் தொடங்கி, படிப்படியாக அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
சீரகத் தண்ணீர் நம் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும், இது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது, வாயு மற்றும் வீக்கம் பிரச்சனையை நீக்குகிறது மற்றும் சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.
இது செரிமான அமைப்பை பலப்படுத்துவதுடன், வயிற்றை சுத்திகரித்து ஒட்டுமொத்த செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -