Bay Leaf Benefits : வாசனை மிக்க பிரிஞ்சி இலையில் இவ்வளவு நன்மைகளா?
அற்புதமான நறுமணத்தை கொடுக்கும் பிரிஞ்சி இலையை பிரியாணி, நெய் சோறு, புலாவ் போன்ற உணவு வகைகளில் சேர்ப்போம். இதில் பல மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரிஞ்சி இலையில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், ஆன்டி வைரல், ஆன்டி ஃபங்கல் பண்புகள் நிறைத்துள்ளதால் இது காயங்களை விரைவில் குணமாக்கலாம்.
பிரிஞ்சி இலை ஜீரண சக்தியை மேம்படுத்தலாம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யவும் உதவும்
பிரிஞ்சி இலை வயிறு உப்புசத்தை குறைக்கலாம். அத்துடன் வாய்வுத் தொல்லையை குறைக்க உதவலாம்
வெறும் வயிற்றில் இதை டீ வைத்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம்
பிரிஞ்சி இலையின் வாசனை நுரையீரலுக்கு மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது. தினமும் காய்ந்த இலைகளை எரித்து, அதன் புகை நறுமணத்தைச் சுவாசிக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -