Royal Falooda Recipe : எல்லோருக்கும் பிடித்த ராயல் ஃபலூடா..இப்போ வீட்டிலே செய்யலாம்!
தேவையான பொருட்கள் : ஜெல்லி செய்ய : ஜெல்லி கிரிஸ்டல் - 1 பாக்கெட், தண்ணீர். ரோஸ் மில்க் செய்ய : பால் - 1/2 லிட்டர் கொதித்து ஆறியது, ரோஸ் சிரப் - 2 மேசைக்கரண்டி, சர்க்கரை - 1 1/2 மேசைக்கரண்டி. ராயல் ஃபலூடா செய்ய : ஸ்ட்ராபெரி ஜெல்லி, குளீருட்டிய ரோஸ் மில்க், சேமியா, சப்ஜா விதைகள், வெண்ணிலா ஐஸ் கிரீம், பாதாம், பிஸ்தா, டுட்டி ஃப்ரூட்டி, செர்ரி பழம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஜெல்லி செய்ய, பாக்கெட்'டில் உள்ள குறிப்புகளை பின்பற்றி ஜெல்லி'யை கரைக்கவும். 45 நிமிடம் வைக்கவும். ரோஸ் மில்க் செய்ய, பால் கொதிக்க வைத்து, ஆறவைக்கவும். ஆறிய பாலில் ரோஸ் சிரப் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
அடுத்து சிறிதளவு தண்ணீர் கொதிக்கவைத்து, சேமியாவை வேகவைத்து, வடிகட்டி எடுத்து வைக்கவும். சப்ஜா விதைகளை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைக்கவும் ஃபலூடா செய்ய, முதலில் ஜெல்லி, வேகவைத்த சேமியா போடவும்.
இதன் மேல் ரோஸ் சிரப் ஊற்றி, சப்ஜா விதைகள் போடவும். அடுத்து குளீருட்டிய ரோஸ் மில்க் ஊற்றவும். அதன் மேல் வெண்ணிலா ஐஸ் கிரீம் வைக்கவும்.
அடுத்து நறுக்கிய பாதாம், பிஸ்தா போடவும். இதமேல் நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம் போடவும். அடுத்து ஜெல்லி, சப்ஜா விதைகள், ஐஸ் கிரீம் போடவும்.
கடைசியாக, பாதாம், பிஸ்தா, டுட்டி ஃரூட்டி, செர்ரி பழம் போட்டு பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -