Indian Filter Coffee: உலகின் சிறந்த காஃபி! 2வது இடத்தை தட்டித் தூக்கிய நம்ம பில்டர் காஃபி!
பிரபலமான உணவு மற்றும் பயணங்களை நிர்வகிக்கும் நிறுவனமான TasteAtlas - 2023- 2024 ம் ஆண்டு மிகவும் பிரபலமான உணவுகள் இடங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் உள்ள 38 காஃபி வகைகள் குறித்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில், இந்திய வகை ஃபில்டர் காஃபி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
கியூபா எஸ்பிரெசோ காஃபி முதலிடத்தில் உள்ளது. 2வதுஇடத்தில் ஃபில்டர் காஃபி, எஸ்பிரெசோ ஃப்ரெடோ காஃபி 3வது இடத்தில், 4வது இடத்தில் ஃப்ரெடோ கப்புசினோ உள்ளது.
ஐந்துவது இடத்தில் இத்தாலியின் கப்புசினோ, 6வது இடத்தில் துருக்கியின் டர்கீஸ் காஃபி, 7வது இடத்தில் இத்தாலியின் ரிஸ்ட்ரெட்டோ உள்ளது.
8வது இடத்தில் கிரீஸிடன ஃப்ராப், 9வது இடத்தில் ஜெர்மணியின் ஈஸ்காஃபி, 10வது இடத்தில் வியாட்நாமின் ஐஸ் காஃபி உள்ளது.
இதே நிறுவனம் கடந்த சில மாதங்களாக எடுத்த கணக்கெடுப்பில், மசாலா டீ உலகின் இரண்டாவது மிகச் சிறந்த ஆல்ஹகால் இல்லாத பானம் (Second-Best Non-Alcoholic Beverage) என பெயர் பெற்றுள்ளது.