Chocolate Cheesecake : பேக் செய்யாமல் சூப்பரான சீஸ் கேக் சாப்பிடனுமா? சாக்லேட் சீஸ்கேக் ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள் : டைஜஸ்டிவ் பிஸ்கட் - 12 முதல் 15 வரை, உப்பு சேர்க்காத வெண்ணெய் - 75 கிராம் உருகியது, ஹங் யோகர்ட் அல்லது கிரீம் சீஸ் - 1 கப், ஐசிங் சர்க்கரை அல்லது தூள் சர்க்கரை - 1 கப், வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன், செமி ஸ்வீட் சாக்லேட் சிப்ஸ் - 1.5 கப், கிரீம் - ½ கப்,ஜெலட்டின் - 1 டீஸ்பூன், செமி ஸ்வீட் சாக்லேட் சிப்ஸ் - 1 கப், கிரீம் - ½ கப் .
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் பிஸ்கட்டை ஒரு பிளெண்டரில் எடுத்து பொடி செய்து, அதில் உருகிய வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை வெண்ணெய் தடவிய பேக்கிங் பேனில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள்.
இப்போது ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை எடுத்து மைக்ரோவேவ் அல்லது டபுள் பாய்லரில் குறைந்த தீயில் உருக்கி ஓரமாக எடுத்து வைத்துவிடுங்கள்.
பிறகு ஜெலட்டினை எடுத்து குளிர்ந்த நீரில் சேர்த்து நன்றாக கலக்குங்கள். அது மென்மையானதும் சாஸ் பேனில் ஜெலடினை போட்டு நன்றாக உருக்குங்கள்.
இப்போது ஒரு கிண்ணத்தில் ஹங் யோகர்ட் அல்லது கிரீம் சீஸ், தூள் சர்க்கரை, வெண்ணிலாவை சேர்த்து பீட்டரை பயன்படுத்தி நன்றாக அடித்து கொள்ளுங்கள். இதில் உருகிய சாக்லேட் மற்றும் ஜெலடினை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
இந்த கலவையை ஃப்ரிட்ஜில் இருக்கும் பேனில் ஊற்றி இரவு முழுவதும் குளிர்விக்கவும். காலையில் சாக்லேட் சீஸ்கேக் சாப்பிட தயாராக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -