✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Lemon Water Benefits: எலுமிச்சை இருந்தால் போதும்..ஏராளாமன பயன்களை பெறலாம்..டிப்ஸ் உள்ளே..!

சுபா துரை   |  29 Jul 2023 05:55 PM (IST)
1

நமது வீடுகளில் இன்றளவும் யாருக்கேனும் செரிமானக்கோளாறு இருந்தால் உடனே நாம் அவர்களுக்கு சிபாரிப்பது, எலுமிச்சை டீ, எலுமிச்சை ஜூஸ், எலுமிச்சை சோடா போன்றவைதான். அப்படியான எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் போன்ற சத்துக்கள் இருப்பது நமக்கு தெரிந்தாலும், எலுமிச்சையில் உள்ள மற்ற நன்மைகள் குறித்து ந்த தொகுப்பில் விரிவாக காணலாம். குறிப்பாக காலையில் எலுமிச்சையை நீரில் கலந்து உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.

2

செரிமானத்திற்கு உதவுகிறது: காலையில் எலுமிச்சை தண்ணீரை முதலில் குடிப்பதால் இரைப்பையில் செரிமானத்திற்கான அமிலங்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது, சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

3

வைட்டமின் சி நிறைந்தது: எலுமிச்சை மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும், மேலும், தீங்கு விளைவிக்கும் நச்சுகளில் இருந்து செல்களை பாதுகாக்க உதவுகிறது. கூடுதலாக, வைட்டமின் சி உடலில் ஹார்மோன்கள் உற்பத்திக்கு உதவுகிறது. அதேபோல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சாதாரண நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

4

நீரேற்றம்: டி-ஹைட்ரேட்டுடன் (நீரேற்றம்) ஒரு நாளைத் தொடங்க எலுமிச்சை நீர் ஒரு சிறந்த வழியாகும். சீரான டி-ஹைட்ரேட்டுடன் இருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் முக்கியமானது. ஒவ்வொரு நாளும் போதுமான அளவு தண்ணீரை உட்கொள்வதை உறுதி செய்வது முக்கியம். நீர் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நம்பகமான ஆதாரமாக இருந்தாலும் எல்லோரும் அதன் சுவையை விரும்புவதில்லை. எனவே நீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து அந்த நீரை அருந்தினால் அதிக தண்ணீர் குடிக்கலாம்.

5

எடை குறைப்பு: எலுமிச்சம்பழத்தில் உள்ள பெக்டின் ஃபைபர் பசியைக் கட்டுப்படுத்தவும், எடை குறைப்பை ஊக்குவிக்கவும் உதவும். கூடுதலாக, எலுமிச்சை நீர் நமக்கு இயல்பாக எழும் பசியை அடக்கும். எலுமிச்சை, தண்ணீர் மற்றும் பிற பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் டிடாக்ஸ் நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.

6

இருதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது: எலுமிச்சையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குவதைத் தடுப்பதன் மூலம் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Lemon Water Benefits: எலுமிச்சை இருந்தால் போதும்..ஏராளாமன பயன்களை பெறலாம்..டிப்ஸ் உள்ளே..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.