Ragi Ladoo Recipe : தீபாவளிக்கு சத்தான இனிப்பு செய்யனுமா..? அப்போ இந்த ராகி லட்டு செய்யுங்க..!
தேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு - 1 கப், முந்திரி பருப்பு - சிறிதளவு, தண்ணீர் - 1/2 கப், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய் தூள், நெய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு கடாயில் நெய் ஊற்றி கேழ்வரகு மாவு போட்டு குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வறுத்து எடுத்து வைக்கவும். அடுத்து ஒரு தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லம் சேர்த்து கரைக்கவும்.வெள்ளம் கரைந்த பின் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
வெல்லப்பாகு ஆறிய பின் அதை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். வறுத்த கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதில் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி பருப்பு மற்றும் நெய் ஊற்றி கலக்கவும்.
கரைத்த வெல்லப்பாகை சிறிது சிறிதாக ஊற்றி மாவை பிணைந்து கொள்ளவும்.
பின் இந்த மாவில் சிறு உருண்டைகளாக உருட்டவும். அவ்வளவு தான் சுவையான ராகி லட்டு தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -