Clothes Stain Removal : வெள்ளை உடையில் பிடித்த சாயத்தை சட்டுனு போக்க சுலபமான டிப்ஸ்!
இந்த அவசர உலகில் பெரும்பாலானோர் வாஷிங் மெஷின் பயன்படுத்தியே தங்கள் துணிகளை துவைக்கின்றனர்.
அவ்வாறு துவைக்கும் போது ஒரு துணியின் கலர் மற்ற துணிகளில் ஒட்டி கொள்வது இயல்பே..அவ்வாறு பிடித்த சாயத்தை எப்படி சுலபமாக நீக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
ஒரு அகலமான பாத்திரத்தில் அந்த துணிக்கு தேவையான அளவு தண்ணீரை எடுத்து கொள்ளவும். ஒரு சட்டைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து கொள்ளலாம். அதில் 1/4 ஸ்பூன் அளவிற்கு ப்ளிச்சீன் பௌடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையில் 1/2 எலுமிச்சை பழத்தையும் சாறு பிழிந்து கலந்து கொள்ளவும்.
இப்போது இந்த நீரில் சாயம் படிந்த துணியை நன்றாக நனைத்து 1 நிமிடத்திற்கு நன்றாக தண்ணீருக்குள் பிரட்டி எடுக்கவும்.
பிறகு துணியை வெளியே எடுத்து கையால் கசக்கி, தண்ணீரில் தேவையான அளவிற்கு ஃபேப்ரிக் கண்டிஷனரை ஊற்றி அந்த துணியை சிறிது நேரம் ஊற வைத்து பின் காய வைக்கவும்.
இப்போது உங்கள் துணி பளபளவென ஜொலிக்கும்.
மிகவும் மென்மையான சருமத்தை கொண்டவர்கள் இந்த குறிப்பை பின்பற்றும் முன் கிளவுஸ் அணிந்து கொள்ளலாம்.