தினமும் தலைக்கு குளிக்கவில்லை என்றால் சைனஸ் வருமா? சித்த மருத்துவம் கூறுவது இதுதான்!

இன்றைய நவீன காலத்தில், அனைவரும் நினைத்த நேரத்திற்கு குளிக்கிறோம். சிலர் வாரத்திற்கு இரண்டு நாட்கள் குளிக்கின்றனர். ஒரு சிலர், குளிப்பதே இல்லை. குளிப்பதற்கு ஒரு வரைமுறை உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
குளிப்பதனால் உடல் சுத்தமாகும், ஒருவிதமான புத்துணர்ச்சி கிடைக்கும். சித்த மருத்துவத்தில் காலையில் குளிப்பதுதான் சிறந்தது என கூறப்படுகிறது.

உடலில் இருக்கும் பித்தத்தை தணிக்க, காலையில் குளிக்க வேண்டும். இரவு நேரம், சந்திரனின் ஆட்சி நடப்பதால் அந்த நேரத்தில் அனைத்தும் குளிராக இருக்கும். அப்போது உடல் தானாகவே சற்று சூடாகும் என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை கருத்து
சூடான உடம்பை காலை நேரத்தில் மீண்டும் குளிர்ச்சியாக்கவே காலையில் குளிக்க வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், நம்மில் பலர் தலையில் தண்ணீர் ஊற்றாமல் கழுத்து வரையே குளிக்கிறோம்.
அப்போது உடலில் சூடு இருந்து கொண்டே இருக்கும் இதனால்தான் சைனஸ், தும்மல், மூக்கடைப்பு வரும் என கூறுகின்றனர்.
தலைக்கு குளித்த உடன் சளி வெளியேறும். நம்மில் பலர், தலைக்கு குளித்ததால்தான் சளி பிடித்துவிட்டது என நினைக்கிறோம் ஆனால் அது முற்றிலும் தவறு என சித்த மருத்துவர்கள் சொல்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -