Omam Biscuit Recipe : செரிமானத்திற்கு உதவும் ஓமம் பிஸ்கட்..இன்றே வீட்டில் செய்யுங்கள்..!
தேவையான பொருட்கள் : மைதா - 2 கப், சர்க்கரை - 6 மேசைக்கரண்டி பொடித்து, பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி, ஓமம் - 1 தேக்கரண்டி, உப்பு - ஒரு சிட்டிகை, வெண்ணை - 3 மேசைக்கரண்டி, பால் - 1/2 கப்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில், மிக்ஸியில் சர்க்கரை போட்டு, பொடித்து கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில், மைதா, பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், ஓமம், உப்பு, வெண்ணை சேர்த்து பிசையவும். வெண்ணை மிருதுவாக இருக்க வேண்டும்.
அடுத்து இதில் பால் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, 40 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
ஊறிய மாவை சிறிது கனமாக தேய்த்து , விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.
வெட்டிய மாவை, அவனில் வைத்து 180 சூட்டில், 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.
அவ்வளவு தான் சுவையான ஓமம் பிஸ்கட் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -