வெயிலுக்கு ஏதாச்சும் ஜில்லுன்னு சாப்பிடணுமா? பாதாம் மில்க் ஷேக் - ரெசிபி!
ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து அதன் தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபின் அரை லிட்டர் பாலை காய்ச்சவும். லேசாக கொதி வந்ததும் கால் கப் சர்க்கரை அல்லது உங்கள் சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.
பின் பாலில் கால் ஸ்பூன் குங்குமப்பூ சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அடுப்பு தீயை குறைத்து விட்டு அதில் அரைத்து வைத்துள்ள பாதாம் பேஸ்ட்டை சேர்த்து கலந்து விடவும்.
கால் டம்ளர் பாலில் ஒரு மேஜைக் கரண்டி கஸ்டர்ட் பவுடர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை கொதிக்கும் பாலில் சேர்க்கவும். பால் சற்று கெட்டி பதம் வறும் வரை பாலை கொதிக்க விட வேண்டும். பால் அதிக தண்ணீராகவும் மாறி விட கூடாது. அதிக கெட்டியாகவும் ஆக கூடாது.
பாலை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்த உடன் சற்று கெட்டி பதத்திற்கு வரும். அதற்கேற்றவாறு காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
பின் அடுப்பை அணைத்து விட்டு பாலை ஆற வைத்து அதை ஃப்ரிட்ஜில் வைக்கவும். 2 மணி நேரத்திற்கு பின் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து இதன் மேல் பாதாம் அல்லது பிஸ்தா துகள்களை தூவி பரிமாறலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -