Thinai Pongal Recipe : சத்தான தினை பொங்கல் சட்டுனு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க!
பொதுவாக பொங்கல் என்றாலே வென்பொங்கல் தான் நினைவுக்கு வரும். அது ஒரு பக்கம் இருக்க, இந்த சத்தான தினை பொங்கலை எத்தனை பேருக்கு தெரியும். இந்த தினை பொங்கல் ரெசிபி இன்றே உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : தினை - 1/2 கப், பாசிப்பருப்பு - 1/2 கப், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, தண்ணீர், நெய் - 1 1/2 மேசைக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது ,இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, முழு மிளகு - 1 தேக்கரண்டி, முந்திரி பருப்பு, கறிவேப்பில்லை
செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தினை மற்றும் பாசிப்பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் பிரஷர் குக்கரில் ஊற வைத்த தினை மற்றும் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் போட்டு குக்கரை மூடி மிதமான சூட்டில் 3 விசில் வரை வேக வைக்கவும்.
பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், முந்திரிப்பருப்பு, முழு மிளகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுத்து, வேகவைத்த தினை பருப்பு கலவையில் சேர்த்து கிளறவும்.
பொங்கல் கெட்டியாக இருந்தால் சிறிது சூடான தண்ணீர் அல்லது சூடான பால் சேர்த்து கிளறிக் கொள்ளவும். அவ்வளவு தான் அருமையான திணை பொங்கல் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -