Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Tawa Paneer Bread Pizza :அட்டகாசமான சுவையில் ஸ்நாக்ஸ் ரெசிபி... கடாய் பனீர் ப்ரெட் பீட்சா ரெசிபி!
முதலில் பனீரை க்யூப்ஸாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். மசாலாப் பொருட்கள் (சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் ஒரு சிட்டிகை உப்பு போன்றவை) மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஊற வைக்க வேண்டும். இதை அப்படியே ஒதுக்கி வைத்துவிட வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமிதமான சூட்டில் சிறிது வெண்ணெய் அல்லது எண்ணெயை ஒரு தவாவில் சேர்ந்த்து சூடாக்கவும். இதில் மிளகுத்தூள், தக்காளி மற்றும் ஸ்வீட் கார்ன் சேர்த்து சிறிது மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
தவா மீது ஒரு ரொட்டி துண்டு வைத்து, தாராளமாக ஒரு ஸ்பூன் பீஸ்ஸா சாஸை ரொட்டி துண்டின் மீது சமமாக பரப்பவும்.
வதக்கி வைத்துள்ள காய்கறி கலைவையில் இருந்து தேவையான அளவு எடுத்து சாஸின் மேல் பரப்ப வேண்டும். ஊறவைக்கப்பட்டுள்ள பனீர் க்யூப்ஸை காய்கறிகளின் மேல் வைக்கவும்.
பனீர் மற்றும் காய்கறிகளின் மீது மொஸரெல்லா ( இத்தாலி) சீஸ் தடவ வேண்டும்.
சீஸ் மீது திருநீற்றுப் பச்சை, பொடியாக நறுக்கிய காய்ந்த மிளகாய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை தூவி விட வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -