Almond Banana Jaggery Cake: தீபாவளி ஸ்பெஷல் இனிப்பு: பாதாம் வாழைப்பழ வெல்ல கேக் ரெசிபி!
1/4 கப் வெண்ணெய் உருக்கவும். 8 கப் பாத்திரத்தில் 2 தேக்கரண்டி உருகிய வெண்ணெய் ஊற்றவும்; பான் ( கடாய்) பக்கங்களிலும் கீழேயும் வெண்ணெய் தடவ வேண்டும். வெல்லம், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் மற்றும் பாதாம் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடாயின் அடிப்பகுதியில் பாதி வெல்லம் கலவையை தெளிக்கவும்; மீதமுள்ள கலவையை மீதமுள்ள உருகிய வெண்ணெயுடன் சேர்த்து அப்படியே வைத்து விட வேண்டும்.
ஒரு பெரிய கிண்ணத்தில், மீதமுள்ள 1/4 கப் வெண்ணெயை கிரானுலேட்டட் சர்க்கரையுடன் (REFINED) கலக்கும் வரை அடிக்க ( Beat 2செய்ய வேண்டும். பின் ஒரு முட்டை சேர்த்து அடிக்க வேண்டும். பின் மசித்த வாழைப்பழம் சேர்த்து அடிக்கவும்.
பேக்கிங் பவுடர், சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை கலக்கவும். வாழைப்பழ கலவையில் மோர் சேர்த்து நன்கு கலக்கும் வரை கிளறவும். தயாராக வைத்துள்ள பாத்திரத்தில் பாதி மாவை ஊற்றவும். மீதமுள்ள வெல்லம் சர்க்கரை கலவையை மேலே சமமாக ஸ்பூன் செய்யவும்; மீதமுள்ள மாவுடன் மூடி வைக்கவும்.
இதை மைக்ரோவேவ் அவனில் வைத்து 180 டிகிரியில் 50 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
5 நிமிடங்கள் கேக்கை குளிர்விக்கவும், பின்னர் கேக்கை பரிமாறும் தட்டில் மாற்றி, கேக்கை சூடாகவோ அல்லதுஆறிய பின்னரோ பறிமாறலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -