Toor Dal Rasam : வீடு மணக்க மணக்க துவரம் பருப்பு ரசம்.. செய்முறை இதோ!
தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு - 1/2 கப், தக்காளி - 2 நறுக்கியது , பச்சை மிளகாய் - 3 நறுக்கியது , இஞ்சி நறுக்கியது , மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி , கல் உப்பு - 1 தேக்கரண்டி , தண்ணீர் - 1 1/2 கப், எலுமிச்சைபழச்சாறு, கொத்தமல்லி இலை ,நெய் - 1 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 3 , பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் துவரம் பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் பிறகு பிரஷர் குக்கரில் ஊறவைத்த பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்தது பருப்பு முழுகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நான்கு விசில் வரும் வரை வேகவிடவும்.
அடுத்தது கடாயை நெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு , கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும்.
கடுகு பொரிந்த பிறகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கி ரசத்தில் சேர்த்துவிடவும்.
கடைசியாக எலுமிச்சை பழச்சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலக்கினால் சுவையான துவரம் பருப்பு ரசம் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -