Green Peas Masala:பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்! பச்சை பட்டாணி மசாலா செய்முறை இதோ!
தக்காளி, முந்திரி, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தயிர் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சற்று பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அரைத்து வைத்துள்ள தக்காளி மசாலாவை இத்துடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் மேலே மிதந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் போது, பச்சை பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீரை சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் பட்டாணியை வேக வைக்கவும்..
சுவையான பச்சை பட்டாணி மசாலா ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -