French Toast: எளிதான காலை உணவு- சுவையான ப்ரெஞ்ச் டோஸ்ட் ரெசிபி!
ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து அனைத்தையும் நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். முட்டை கலவையை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதோசைக் கல்லை சூடாக்கி, வெண்ணெய் தடவி, வெண்ணெய் உருகியதும், ஒரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து தோசைக்கல்லில் போட்டு வேக வைக்க வேண்டும்.
தோசைக்கல்லில் உள்ள பிரெட் துண்டின் மீது ஒரு சீஸ் ஸ்லைஸை வைத்து, அதன் மேல், மற்றொரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து சீஸ் மீது வைக்க வேண்டும்.
பிரெட்டின் அடிப்பகுதி வெந்த உடன் மறுபுறம் திருப்பி, போட்டு பிரட்டின் ஓரங்களில் வெண்ணெய் தடவி வேக வைக்க வேண்டும்.
வெந்த பிரட்டின் மீது சீஸ் ஸ்லைஸை வைத்து அதன் மேல், மற்றொரு பிரெட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து சீஸ் மீது வைக்க வேண்டும்.
ஓரங்களில் வெண்ணெய் தடவி, மறுபுறம் திருப்பி விட வேண்டும். தோசைக்கல்லை மூடி வைத்து குறைந்த தீயில் 2-ல் இருந்து 3 நிமிடங்கள் வேகவிடவேண்டும்..
மீண்டும் பிரெட் துண்டை மறுபுறம் திருப்பி மூடி வைத்து 1 நிமிடம் வேகவிடவேண்டும். அவ்வளவுதான் சீஸ் பிரஞ்ச் டோஸ்ட் தயார். இதை இரண்டாக வெட்டி சூடாக பரிமாறலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -