உங்க குழந்தைகளின் கண் பார்வை ஆரோக்கியமாக இருக்கணுமா?இந்த உணவுகள் டயட்டில் இருக்கட்டும்!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைக்கு தொலைக்காட்சி, கணினி, ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அப்படியிருக்க குழந்தைகளின் ஸ்கிரீன் நேரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பவர்களுக்கா சில வழிமுறைகளை காணலாம்.
குழந்தைகள் டி.வி. பார்ப்பதைவிட ஸ்மார்ட்ஃபோன் பார்ப்பது அதிகரித்து விட்டது. அவர்களின் கண்களைப் பாதுகாக்க உணவு முறைகளில் சில மாற்றங்களை செய்யலாம்.
சால்மன் - ஒமேகா -3 நிறைந்த மீன் வைகள் கண்கள் வறண்டு போகாமல் இருக்க உதவும். வால் நட், ஃப்ளாக்ஸ் சீட்ஸ், சோயா பீன்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். ஸ்க்ரீன் டைம் அதிகம் இருப்பதால் கண்கள் வறண்டு போகாமல் இருக்க உதவும்.
ஆரஞ்சு பழம் - ஆரஞ்சுப் பழம் வைட்டமின் சி நிறைந்தது. இது கண்களை யு.வி, கதிகளினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும்.
கேரட் - கேரட்டில் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ, பார்வையை பாதுகாக்க உதவும். கண்களில் ஈரபதத்தை தக்க வைக்க உதவும்.
முட்டை - முட்டை உள்ள லியூடைன், ஜியாசாஸ்தின் கண்களை பாதுகாக்கும். பார்வை கூர்மையடைய உதவும்.பாதாம் - தினமும் குறிப்பிட்ட அளவு பாதம் சாப்பிட்டு வருவது கண்களை பாதுகாக்க உதவும். இதிலுள்ள வைட்டமின் - இ கண்களுக்கு நல்லது.