House Cleaning Tips : பெரிதாக மெனக்கெடாமல் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்!
டிப்ஸ் 1 : வீட்டை எப்போதும் சுத்தமாக வைக்க அழுக்கு துணிகளை பெட் மீது, சார் (Chair) மீது, டேபிள் மீது என கண்ட இடங்களில் போடுவதை தவிர்க்கவும். அழுக்கு துணிகளை லான்ட்ரி பாஸ்கெட்டில் போடவும். லான்ட்ரி பாஸ்கெட் குளியல் அறை பக்கத்தில் இருப்பது இன்னும் நல்லது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடிப்ஸ் 2 : மாதம் ஒரு முறை வீட்டிற்கு ஒட்டாரை அடிக்க வேண்டும். ஒட்டாரை அடித்தால் வீடு சுத்தமாகவும் பளிச்சென்றும் இருக்கும்.
டிப்ஸ் 3 : சமையல் அறையை எப்போதும் சமைத்து முடித்த உடன் சுத்தம் செய்வது அவசியம். ஒரு ஸ்பிரே பாட்டிலில் தண்ணீர், பாத்திரம் கழுவும் லிக்விட், வினிகர் கலந்து கொள்ளவும். இதை பயன்படுத்தி கிட்சனை சுத்தம் செய்தால் எளிதில் கரை நீங்கிவிடும்.
டிப்ஸ் 4 : பலருக்கு வீட்டை சுத்தம் செய்வது ரொம்ப கஷ்டமாக இருக்கும். அந்த கலப்பை போக்க போனில் பாட்டு கேட்டு கொண்டே சுத்தம் செய்தால் வேலையும் முடிந்துவிடும் களைப்பாகவும் இருக்காது.
டிப்ஸ் 5 : வீட்டை சுத்தம் செய்ய விருப்பினால் காலை உணவோடு, மத்திய உணவையும் சேர்த்து செய்து வைத்துவிடுங்கள். வீடு சுத்தம் செய்யும் போது நடுவில் எந்த இடையூறும் இருக்காது, நிதானமாக வீட்டை சுத்தம் செய்யலாம்.
டிப்ஸ் 6 : வீட்டில் மாப் போடும் போது அதில் கிருமி நாசினி மருந்தை சேர்த்து மாப் போடுங்கள் . முடிந்த வரை தண்ணீரில் மஞ்சளை கலக்கி வீடு முழுவதும் தெளித்து விடுங்கள் கிருமிகள் பரவாது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -