Maggi On Weight Loss Diet: என்னது மேகி சாப்பிட்டு வெயிட் லாஸ் பண்ணுவீங்களா? நிபுணர் சொன்னது என்ன?
குண்டாக இருப்பது ஆரோக்கியமின்மை இல்லை என்ற சொல்ல துவங்கியிருக்கிறது மருத்துவ உலகம். ஆனாலும், உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாதவர்கள் கொஞ்சம் மெனக்கெடல்களைச் செய்ய வேண்டிதான் இருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉடல் எடை குறைத்தல் என்பது ஒரு பயணம். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பெரும்பாலும் பின்பற்றும் டயட்டில் அவர்களுக்கு பிடித்த, ரசித்து ருசித்து சாப்பிட உணவுகள் ஏதும் இடம்பெறாது.
உடல் எடையை குறைக்கும் பயணத்தில் அடிக்கடி மேக் சாப்பிடுது உகந்ததா?
ஒரு பாக்கெட் மேகியில் 205 கலோரிகள் மற்றும் 9.9 கிராம் புரதம் உள்ளது.
மேகியில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் அல்லது கார்போஹைட்ரேட்டுகளின் உள்ளடக்கம் தோராயமாக 131 கிராம் ஆகும்.
மேகி ஆரோக்கியமான உணவு இல்லை என்கிறார் கதூரியா. இதில் வைட்டமின்கள், நார்ச்சத்து , தாதுக்கள் என எதுவும் இல்லை. சுவையை அதிகரிக்க இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில் அதிக கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் உப்பு உள்ளது,
நீங்கள் மேகியை சாப்பிடலாம். ஆனால் இதில் மிகக் குறைவான ஊட்டச்சத்து மட்டுமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகபட்சமாக மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மேகி சாப்பிடலாம் என்று வரையறை செய்யுங்கள்.
இதோடு காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம். ஆனால், வெண்ணெய் அல்லது சீஸ் சேர்க்க வேண்டாம்“ என்று அவர் தெரிவித்துள்ளார்.
உடல் எடையை குறைக்கும் பயணத்தில் சிலர் தூக்கத்தின் முக்கியத்துவத்தை மறந்து விடுகிறார்கள். உங்கள் உடலில் ஒரு இன்ச் எடை குறைய வேண்டும் என்றாலும் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்காவிடில் அது நடைபெறாது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -