மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு பேசிய சிறுதானியங்கள்.. ஏன் முக்கியத்துவம்?
உடலுக்கு வலிமை சேர்க்கும் சிறுதானியங்கள் நம் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழ்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிறுதானியங்களின் நன்மைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
அதிக ஃபைபர் சத்து இருப்பதால், அடிக்கடி பசி உணர்வு எழாமல் இருக்கும். செரிமான மண்டலம் சீராக இயங்க உதவுகிறது.
இதில் உள்ள பொட்டாசியம் மூளை சீராக இயங்கவதற்கும், உடலிலுள்ள மற்ற பாகங்களுக்கு தகவல்களை எடுத்துச் செல்ல உதவும் செல்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் ஏ, பி, பாஸ்பரஸ், ஆன்டி - ஆக்ஸிடன்ட், நியாசின், கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து ஆகியவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன.
உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் பாதுகாக்கிறது.
இதில் குறைந்த க்ளைகமிக் இன்டெக்ஸ் (glycemic index) இருபத்தால் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
சிறுதானியங்களையும் உணவில் சேர்த்துகொள்வது உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்.
சிறுதானியங்களில் பொட்டசியம் சத்து மிகுந்து காணப்படுகிறது. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -